சென்னை: திரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வெங்கடேஷை நான் தான் சிபாரிசு செய்தேன் என்று கமலஹாசன் கூறியுள்ளார்.
மோகன் லால் - மீனா நடித்த மலையாளப் படமான த்ரிஷ்யம் கேரளாவில் ரிலீசாகி வெற்றிகரமாக 150 நாட்களைத் தாண்டி ஓடியது. வளைகுடா நாடுகளில் வசூலில் புது சாதனை நிகழ்த்தியது.
இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்ய பெரும் போட்டியே நடக்கிறது. அனைத்து மொழிகளிலும் ‘ரீமேக்' உரிமை பெருந்தொகைக்கு விலை போனது.
தமிழில் திரிஷ்யம் ரீமேக்கில் கமல் நடிக்கிறார். தற்போது உத்தம வில்லன் படத்தில் அவர் நடித்து வரும் அவர், அந்தப் படத்தை முடித்த கையோடு த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்குக்கு வருகிறார்.
கன்னடத்தில் இந்தப் படத்தில் வி ரவிச்சந்திரன் நடித்துள்ளார். பி வாசு இயக்க, இளையராஜா இசையமைத்துள்ளார். விரைவில் அந்தப் படம் வெளியாகவிருக்கிறது.
தெலுங்கில் திரிஷ்யம் ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, ஒரிஜினலில் நடித்த மீனாவே நடிக்கிறார். போலீஸ் அதிகாரி வேடத்தில் நதியா நடித்துள்ளார். ஸ்ரீப்ரியா இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு அறக்குவேலி, விஜயநகரம், மற்றும் கேரளாவில் நடந்து முடிந்துள்ளது.
த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நடிகர் தேர்வு நடந்த போது வெங்கடேஷ் பொருத்தமாக இருப்பார் என்று கமல் ஹாசன்தான் சிபாரிசு செய்தாராம். இதையடுத்து அவரை ஒப்பந்தம் செய்து படத்தை முடித்துள்ளனர். இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளரும் ஸ்ரீப்ரியாவின் கணவருமான ராஜ்குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.