1976 ஆம் ஆண்டில் 'அன்னக்கிளி' திரைப் படத்தில் இசையமைப்பாளராகிய ராசையா என்ற இசைஞானி இளையராஜா மண் மணக்கும் கிராமத்து இசையை அறிமுகப்படுத்தி திரைப்பட ரசிகர்களை தன வயப்படுத்தினார். சாஸ்திரிய இசையிலும் வியத்தகு வித்தைகள் புரிந்த 'மாஸ்ட்ரோ ‘ இளையராஜா அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் பயணம் செய்து இசைவிருந்து படைத்து வருகிறார்.
இளையராஜா அடுத்து மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இசை ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்கிறார். கிங் ஆப்தி கிங் என்ற பெயரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கோலாலம்பூரில் டிசம்பர்- 28 ந்தேதி நடக்கிறது.
நிகழ்ச்சியில் இளையராஜா, இளைராஜாவின் மகன்கள் யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, மகள் பவதாரிணி , கங்கை அமரன், வெங்கட் பிரபு, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிஹரன்,ஹரிணி உள்பட பலர் கலந்து கொண்டு பாடுகிறார்கள்