நகைச்சுவை வேடங்களில், 100 படங்களுக்கு மேல் நடித்தவர், சுருளி மனோகர். இவர், ‘இயக்குனர்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார். இந்த படத்தை பற்றி அவர் கூறுகிறார்:–
‘‘திரையுலகில் நுழைந்து ஒரு படத்தை டைரக்டு செய்து, அது வெளியாகி 100 நாட்கள் ஓட வேண்டும். 100–வது நாளில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற லட்சியத்துடன் வருகிறான், கதாநாயகன். அவன் லட்சியம் நிறைவேறியதா, இல்லையா? என்பதை நகைச்சுவையுடன் சொல்லும் படம் இது.
கதாநாயகனாக ஜெய்கிருஷ்ணா, நாயகிகளாக அஸ்மிதா, சுருதி ஸ்வாதிகா நடிக்கிறார்கள். மற்றும் அருள்மணி, பயில்வான் ரங்கநாதன், மனோபாலா, பாலு ஆனந்த், சண்முகசுந்தரம், விஜய் கிருஷ்ணராஜ், பாண்டு, கிங்காங், போண்டாமணி, பாவா லட்சுமணன், சுப்புராஜ், தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
பூவை செங்குட்டுவன், முத்துலிங்கம், பிறைசூடன், காமகோடியன் பாடல்களுக்கு சங்கர் கணேஷ் இசையமைக்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயலட்சுமி கோல்டன் ஜூப்ளி பிலிம்ஸ் சார்பில் எஸ்.ரங்காரெட்டி தயாரிக்கிறார்.