நடிகர்கள்:
விமல், ஷிவா, அஞ்சலி, ஓவியா.சந்தானம், மனோபாலா,
இசை:
விஜய் எபினேசர்
ஒளிப்பதிவு:
யு.கே.செந்தில் குமார்
இயக்கம்:
சுந்தர்.சி.
தயாரிப்பு:
ரோனி ஸ்குரூவாலா & சித்தார்த் ராய் கபூர்
கதையின் கரு: பாட்டன், முப்பாட்டன் ஆரம்பித்த பழைய ஓட்டலை காப்பாற்ற போராடும் இளைஞன்
கும்பகோணத்தில், பல தலைமுறைகளாக நடத்தப்படும் ஓட்டல், மசாலா கபே. மாடர்னாக நடத்தப்படும் ஓட்டல்களுக்கு மத்தியில், பழைய ஓட்டலான மசாலா கபேயை நடத்துவதற்கு சிரமப்படுகிறார், மசாலா கபேயின் வாரிசுகளில் ஒருவரான விமல். வட்டிக்கு கடன் வாங்கி, அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் ஓடி ஒளிகிறார். இந்த சூழ்நிலையில் அவருக்கும், சுகாதார அதிகாரி அஞ்சலிக்கும் காதல் மலர்கிறது.
மசாலா கபே இருக்கிற இடத்தில், ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்ட அதே ஊரை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் ஆசைப்படுகிறார். அதற்கு வில்லத்தனமான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் உதவுகிறார். விமலின் தம்பி ஷிவாவை தந்திரமாக சூதாட்டத்தில் கவிழ்த்து, மசாலா கபேயை கைப்பற்றுகிறார், ஜான் விஜய். அவரிடம் இருந்து ஓட்டலையும், முறை மாப்பிள்ளை சந்தானத்திடம் இருந்து காதலி அஞ்சலியையும் விமல் எப்படி மீட்கிறார்? என்பதே கதை.
காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படம். அதில் வெற்றி பெற்று இருக்கிறார், டைரக்டர் சுந்தர் சி. அப்பாவித்தனமான அய்யோ பாவம் கதாபாத்திரத்துக்கு விமல் கச்சிதமாக பொருந்துகிறார். சுகாதார அதிகாரி யார் என்று தெரியாமல், ஓட்டலுக்கு சாப்பிட வந்த பெண்ணுக்கு கடிதம் கொடுத்து உதை வாங்குவதில் ஆரம்பித்து, அஞ்சலியின் முறை மாப்பிள்ளை சந்தானத்திடம் மாட்டிக் கொண்டு தவிப்பது வரை, இவருடைய நகைச்சுவை கலாட்டாக்கள் அமர்க்களம்.
ஷிவா அறிமுகமானதுமே தியேட்டர் களை கட்டுகிறது. அவருடைய வசன உச்சரிப்பும், அலட்டிக்கொள்ளாத நடிப்பும் முன்னணி ÔகாமெடிÕ நடிகர்களுக்கு சரியான சவால். மசாலா கபேயை மாடர்னாக மாற்றுவதற்கு ஒரு கடைக்குள் புகுந்து திருடுவதும், காதலி ஓவியாவின் ஆசையை நிறைவேற்றுவதற்கு பர்தா அணிந்து கொண்டு களவாணியாக மாறுவதும், ஆரவாரமான நகைச்சுவை காட்சிகள்.
அஞ்சலி ஒட்டுகிற அளவுக்கு, ஓவியா மனதில் ஒட்டவில்லை. சுகாதார அதிகாரியாக அஞ்சலி வருவதும், அவரை யார் என்று தெரியாமல் விமல் அசடு வழிவதும் ரசனையான காதல் காமெடி. அஞ்சலியின் முறை மாப்பிள்ளை வெட்டுப்புலியாக வரும் சந்தானம், நகைச்சுவை திருவிழாவே நடத்துகிறார். மகளை திருமணம் செய்யவில்லை என்பதற்காக மனோபாலா, சந்தானத்தை எதிர்த்து தேர்தலில் நிற்பதும், அவர் குழாய் மூலம் பால் சப்ளை செய்தால், இவர் குழாய் மூலம் சாராயம் சப்ளை செய்வதும் அட்டகாசமான நகைச்சுவை. பஞ்சு சுப்பு பத்து கோடி மதிப்புள்ள வைரக்கற்களை செல்போனுக்குள் மறைத்து வைத்து மாப்பிள்ளையிடம் கொடுக்க, அந்த செல்போன் விபசார அழகி, ரவுடி, போலீஸ் என கை மாறுவதும் ரகளையான சீன்கள்.
வில்லன் ஜான் விஜய், பழைய மந்திரி வீட்டின் குளியல் அறை ஓட்டைக்குள் மாட்டிக் கொண்டு விழிக்கிற காட்சியில், தியேட்டர் அதிர்கிறது. கதாநாயகன்&கதாநாயகியில் இருந்து அஞ்சு வட்டி அழகேசனாக வரும் இளவரசு, சிரிப்பு போலீஸ் ஜார்ஜ் என எல்லா கதாபாத்திரங்களையும் தமாசாக உருவாக்கியிருப்பதும், மசாலா கபேயில் விமல் வளர்க்கும் நாயை கூட காமெடி பண்ண வைத்திருப்பதும், டைரக்டர் சுந்தர் சி.யின் கெட்டிக்காரத்தனம்.
பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்களை பஞ்சு சுப்பு செல்போனுக்குள் வைப்பதும், அதை வேறு ஒருவர் கையில் அலட்சியமாக தூக்கிக் கொடுப்பதும், நம்ப முடியாத சீன்கள். கும்பகோணம் நகர சந்து பொந்துகளுக்குள் எல்லாம் புகுந்து விளையாடி இருக்கிறது, யு.கே.செந்தில்குமாரின் காமிரா. விஜய் எபினேசரின் இசையில், "இவளுங்க இம்சை தாங்க முடியலே" பாடலும், நடனமும் ரசிக்க வைக்கிறது. கலகலப்பின் உச்சம், மசாலா கபே.