நடிகர்கள்:
ஹேமசந்திரன்,நந்தனா,ராஜீவ் கிருஷ்ணா,பாலாசிங்,எம்.எஸ்.பாஸ்கர்,சண்முகராஜன்
இசை:
ரகுநந்தன்
ஒளிப்பதிவு:
சுரேஷ் பார்கவ்
இயக்கம்:
தனபால் பத்மநாபன்
தயாரிப்பு:
மின் வெளி மீடியா
கதையின் கரு: ஒரு மில் தொழிலாளியின் காதல்.
கிருஷ்ணவேணி பஞ்சாலையில் வேலை செய்யும் ஹேமசந்திரனும், நந்தனாவும் காதலிக்கிறார்கள். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். நந்தனாவின் அக்காவை ஹேமசந்திரனின் நண்பன் கடத்தி சென்று காதல் திருமணம் செய்து கொள்கிறார்.
இது, நந்தனாவின் அம்மா ரேணுகாவுக்கு தீராத கோபத்தை ஏற்படுத்துகிறது. மகளை வீட்டுக்கு வரவழைத்து, சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விடுகிறார். இந்த நிலையில், இளைய மகள் நந்தனாவும் வேறு சாதியை சேர்ந்தவனை காதலிப்பதை நேரில் பார்த்து, ரேணுகா ஆத்திரம் அடைகிறார். தன் குடும்ப மானமே போய்விட்டதாக கருதி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறார்.
இதற்கிடையில், கிருஷ்ணவேணி பஞ்சாலை நஷ்டம் அடைவதால், ஆலை இழுத்து மூடப்படுகிறது. தொழிலாளர்கள் ஆலையை திறக்கக் கோரி போராடுகிறார்கள். வருடங்கள் உருண்டோடுகின்றன. பல வருடங்களுக்குப்பின் ஆலையின் முதலாளி ராஜீவ் கிருஷ்ணா, தொழிலாளர்கள் எல்லோரையும் ஆலைக்கு வரவழைத்து, அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை பிரித்து கொடுக்கிறார்.
ஹேமசந்திரனும், நந்தனாவும் தம்பதிகளாக அந்த நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். பஞ்சாலை சம்பந்தப்பட்ட ஒரு கதையை, இத்தனை விலாவாரியாக இதுவரை யாரும் சொன்னதில்லை. ஆலையின் பிரச்சினைகளுக்குள், காதல்–சாதி பிரச்சினைகளை நுழைத்து, விவகாரம்–விரசம் இல்லாமல் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் தனபால் பத்மநாபன்.
ஹேமசந்திரன், நந்தனா இருவரும் கதாபாத்திரங்களாக மனதில் நிற்கிறார்கள். நந்தனா அக்காவின் மரணம், எதிர்பாராத சோகம். சண்முகராஜன், காமெடி கலந்த வில்லனாக வருகிறார்.
தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்ட கண்ணியமான முதலாளியாக ராஜீவ் கிருஷ்ணா, மனதில் பதிகிறார். ஆலையில் கேண்டீன் நடத்தும் எம்.எஸ்.பாஸ்கர், கலகலப்பூட்டுகிறார். பாலாசிங், கதாநாயகனின் தந்தை டிப்டாப் பழனிசாமியாகவும், தென்னவன், கதாநாயகியின் தாய்மாமாவாகவும் வருகிறார்கள்.
ரகுநந்தன் இசையில், கவிஞர் வைரமுத்து எழுதிய ‘‘ஆலைக்காரி பஞ்சாலைக்காரி...’’ பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. திரைக்கதையில் வேகமும், விறுவிறுப்பும் இருந்திருந்தால், படம் பரபரப்பாக பேசப்பட்டிருக்கும்.