நடிகர்கள்: சுந்தர் சி-சினேகா
இயக்கம்: கே.செல்வபாரதி
கதையின் கரு: தம்பிகள் மீது பாசம் கொண்ட ஒரு அண்ணன்.
ரஜினிகாந்த் நடித்த `முரட்டுக்காளை' படத்தை சில மாற்றங்களுடன் மீண்டும் படமாக்கியிருக்கிறார்கள்.ரஜினிகாந்த் நடித்த `காளையன்' பாத்திரத்தில், சுந்தர் சி. வருகிறார். அவருக்கு நான்கு தம்பிகள். தம்பிகள் சொன்னால், எதையும் செய்யக்கூடிய பாசமிகு அண்ணன், சுந்தர் சி. பக்கத்து ஊர் பண்ணையார் சுமன். இவருடைய ஒரே தங்கையான சிந்து துலானி, சுந்தர் சி. மீது ஒருதலை காதல் கொள்கிறார். சுந்தர் சி.யிடம் இருக்கும் நூறு ஏக்கர் நிலத்தை தன்வசப்படுத்துவதற்காக, அவருக்கு தங்கையை திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார், சுமன்.
இந்த சதித்திட்டம் நிச்சயதார்த்தத்தின்போது சுந்தர் சி.க்கு தெரியவர, திருமணத்தை நிறுத்துகிறார். இருவருக்கும் பகை ஏற்படுகிறது.இந்த நிலையில் சுமன் ஆசைப்பட்ட சினேகா, சுந்தர் சி. வீட்டில் அடைக்கலம் ஆகிறார். இது, சுமனுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. சுந்தர் சி.யும், சினேகாவும் காதல்வசப்பட்டு திருமணத்துக்கு தயார் ஆகிறார்கள். சுமனின் சதியால் அந்த திருமணம் நின்று போகிறது. செய்யாத கொலைக்காக, சுந்தர் சி.யை போலீஸ் கைது செய்கிறது.
இத்தனை கெடுதல்களுக்கும் சூத்ரதாரியாக-சுமனை பின்னால் இருந்து இயக்குபவராக விவேக் வருகிறார். விவேக் எதற்காக சுமன் பின்னால் நிற்கிறார்? என்பது `கிளைமாக்ஸ்.'
ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரத்தை தூக்கி சுமக்கிற அளவுக்கு கிராமத்து அண்ணனாக பொருத்தமாகவே இருக்கிறார், சுந்தர் சி. அவருடைய அறிமுக காட்சியான ரேக்ளா ரேஸ், அட்டகாசமான ஆரம்பம். சிந்து துலானியின் வயிற்றில் வாயை வைத்து பாம்பு விஷம் எடுக்கிற சீனில், கிளுகிளுப்பு. சினேகாவுடனான பாடல் காட்சிகளில் காதல் ரசம் சொட்டுகிறது.சண்டை காட்சிகளில், நாடி-நரம்புகள் முறுக்கேறுகின்றன. குறிப்பாக, அந்த ரெயில் சண்டை காட்சியில், சுந்தர் சி. உயிர் பணயம் வைத்து நடித்து இருக்கிறார்.
சுமனின் அடியாட்களுக்கு பயந்து வைக்கோல் போருக்குள் ஒளிந்து கொள்வதில் ஆரம்பித்து, சுந்தர் சி.யின் நான்கு தம்பிகளின் சம்மதத்தை பெறுவதற்காக, ``நான் எங்க ஊருக்கே போகிறேன்'' என்று நடிப்பது வரை, சினேகா கவனம் ஈர்க்கிறார்.
பழைய முரட்டுக்காளையில் சுருளிராஜன் நடித்த கதாபாத்திரத்தில், அரவாணியாக விவேக், படம் முழுக்க வருகிறார். அவருடைய அங்க அசைவுகளும், குறும்புத்தனமான நடிப்பும், வசன உச்சரிப்பும், கலகலப்பின் உச்சம். `சரோஜா'வை காதலிக்கும் பதினாறு வயது டாக்டர் மகனாக, செல் முருகன். அவர், ``மயில்'' என்று அழைக்கும்போது, தியேட்டர் அதிர்கிறது. ஜெய்சங்கர் நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் சுமன், மிரட்டுகிறார். கவர்ச்சிக்கு, சிந்து துலானி. சுந்தர் சி.யை ஒருதலையாக நேசித்து, கடைசியில் உயிர் விடும்போது, அனுதாபத்தை சம்பாதிக்கிறார்.
"பொதுவாக என் மனசு தங்கம்" பாடலை திருப்பிப் போட்டு ரசிக்க வைத்து இருக்கிறார், ஸ்ரீகாந்த் தேவா. பின்னணி இசை, திரைக்கதைக்கு விறுவிறுப்பூட்டுகிறது.
செல்வபாரதி டைரக்ஷனில் படத்தின் முதல் பாதி, நேரம் போனதே தெரியவில்லை. இடைவேளைக்குப்பின், கதை மெதுவாக நகர்கிறது. உச்சக்கட்ட காட்சியில், அந்த ரெயில் சண்டையும், விவேக் சம்பந்தப்பட்ட திடீர் திருப்பமும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.