நடிகர்கள்:
ஸ்ரீ,ஊர்மிளா மஹந்தா,மிதுன் முரளி, முத்துராமன்,மனிஷா யாதவ்
இசை:
ஆர். பிரசன்னா
ஒளிப்பதிவு:
எஸ்.டி.விஜய் மில்டன
இயக்கம்:
பாலாஜி சக்திவேல்
தயாரிப்பு:
N. சுபாஷ் சந்திரபோசு.
கதையின் கரு: இளைஞர்களின் ஆபாச எஸ்.எம்.எஸ்- எம்.எம்.எஸ்.களால் ஏற்படும் விபரீதம்.
பிளாட்பார கடையில் வேலை செய்யும் அனாதை இளைஞன் வேலு, பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்யும் ஜோதியை காதலிக்கிறான்.ஆடம்பரமான அந்த அடுக்குமாடி குடியிருப்பில், வேலைக்கு போகும் அம்மா, அப்பா. அவர்களின் அழகான மகள், ஆர்த்தி. இவள் மீது மாடியில் குடியிருக்கும் மாணவன் தினேஷ் கண் வைக்கிறான்.
தினேஷ், பிஞ்சில் பழுத்தவன். பெண்களை செல்போனில் ஆபாச படம் எடுத்து ரசிப்பவன். அவனுடைய அந்தரங்கம் தெரியாமல், அவன் விரித்த வலையில் சிக்குகிறாள், ஆர்த்தி. அவளையும் அவன் ஆபாச படம் எடுத்து, நண்பர்களின் கண்களுக்கு விருந்தாக்குகிறான். அவனுடைய செல்போனில் யதேச்சையாக தன் ஆபாச படங்களை பார்த்து, அதிர்ச்சி அடைகிறாள் ஆர்த்தி. அவனை போலீசில் மாட்டி விடுவதாக எச்சரிக்கிறாள். மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில், ஆர்த்தியை அழிக்க முயற்சிக்கிறான், தினேஷ்.
அவனுடைய கொலைவெறி தாக்குதலில், அப்பாவி பெண் ஜோதி சிக்கி தன் அழகை இழக்கிறாள். வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் பணம் வாங்கிக்கொண்டு நிரபராதியான வேலுவை பலிகடா ஆக்குகிறார். அந்த இன்ஸ்பெக்டரை நீதி தேவதை எப்படி தண்டிக்கிறாள்? என்பது சீட்டு நுனியில் உட்கார வைக்கும் உச்சக்கட்ட காட்சி.
"காதல்" படம் கொடுத்த பாலாஜி சக்திவேலின் இன்னொரு திருப்புமுனையான படம். ஆஸ்பத்திரியிலும், அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பிலுமாக ஒருவித கனத்த சோகத்துடன் படம் தொடங்குகிறது. "என் மகளை காப்பாத்துங்க..." என்று ஒரு தாய் மார்பில் அடித்துக்கொண்டு கதறுகிறாள். போலீஸ் விசாரணை பின்னணியில், கதை மெதுவாக வேகம் பிடிக்கிறது. வேலு, ஜோதி மீதான தன் காதலை இன்ஸ்பெக்டரிடம் சொல்லி முடிக்க-அடுத்து விசாரணைக்காக ஆர்த்தி அழைக்கப்படுகிறாள். இன்னொரு பையனையும் விசாரிக்க வேண்டும்" என்று அவள் சொல்வதுடன், இடைவேளை வருகிறது. படத்தின் முதல் பாதியில், பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லை. ஆனால், என்னவோ நடக்க போகிறது என்ற சின்ன பதற்றம் மட்டும் இருக்கிறது. இடைவேளைக்குப்பின், கதை மின்னல் வேகத்தில் பறக்கிறது. காமாந்தகன் தினேசின் வலையில் ஆர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக சிக்குவதும், அவனுடன் "அவுட்டிங்" போய் கடலில் குளிப்பதும்-கிளுகிளுப்பான த்ரில். தினேசின் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து ஆர்த்தி அதிர்வது, காரை பழுதுபார்த்து விட்டு அவன் வருவதற்குள், செல்போனில் உள்ள மெமரி கார்டை ஆர்த்தி கைப்பற்றுவது- திக்..திக்.. நிமிடங்கள்.
பணத்துக்கு ஆசைப்பட்டு உண்மை குற்றவாளியை தப்பிக்க விட்டு, நிரபராதியை குற்றவாளியாக்கிய இன்ஸ்பெக்டருக்கு கிடைக்கும் தண்டனை, யாரும் யூகிக்க முடியாத கிளைமாக்ஸ். இரவில் நடக்கும் விருந்துக்கு மகளை அழைத்தற்காக, போனில் திட்டுகிற அப்பா அதன் பிறகு மகளையும், விருந்துக்கு அழைத்தவனையும் கண்காணிக்க மாட்டாரா? போலீஸ் காவலில் வேலு சித்ரவதை செய்யப்பட்ட பின், இன்ஸ்பெக்டர் நல்லவர் போல் வந்து அவனை சாப்பிட வைத்ததும், அவர் என்ன சொல்ல போகிறார்? என்பதை சுலபமாக யூகித்து விட முடிகிறது. வேலுவாக வரும் ஸ்ரீ, அசல் பிளாட்பாரவாசியாகவே மாறியிருக்கிறார். ஜோதியாக வரும் ஊர்மிளா மஹந்தா, குடிசை வீட்டு கவிதை. தினேஷ், பளபள என்று பணக்காரத்தனத்துடன் ஒன்றியிருக்கிறார். கதாபாத்திரம் போலவே அழகான ராட்சசி, ஆர்த்தி.
இன்ஸ்பெக்டராக வரும் முத்துராமனின் நடிப்பும், வசன உச்சரிப்பும் யதார்த்தம். ஆபாச படம் பார்க்கும் மாணவர்களை அவர் ஒற்றை வார்த்தையில் திட்டும்போது, அதிர்கிறது. படம் முடியும்போது, தியேட்டரில் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.