நடிகர்கள்: விமல், நிஷா அகர்வால்
சந்தானம், சார்லி, யுவராணி, பிரகதி, உமாபத்மநாபன்
இசை: தமன்
ஒளிப்பதிவு: சேகர் ஜோசப்
இயக்கம்: பிரேம் நிஸார்
தயாரிப்பு: ரமேஷ் தண்ட்ரா
கதையின் கரு: காதலித்து திருமணம் செய்பவர்கள், விவாகரத்து வரை போகக்கூடாது...
விமல், சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கிறார். மாதம் ஒரு லட்சம் சம்பளம், வீடு, வசதி வாய்ப்புகளுடன் வாழ்கிறார். யதார்த்தமாக நிஷா அகர்வாலை சந்திக்கிறார். இருவரின் சந்திப்புகள் மோதலில் ஆரம்பித்து, காதலில் முடிகிறது.
பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்துகொள்கிறார்கள். சில நாட்களிலேயே இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகிறது. சண்டை, பெரிதாக வெடிக்கிறது. விவாகரத்து வரை போகிறார்கள். அதுவும் கிடைத்து விடுகிறது. பெற்றோர்கள் இரண்டாவது திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அதற்கும் இருவரும் சம்மதிக்கிறார்கள்.
விமலுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கிறார்கள். நிஷாவுக்கும் அவர்கள் வீட்டில் மாப்பிள்ளை தேடுகிறார்கள். பார்த்த வரன்கள் இருவருக்கும் பிடித்து விட, திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். இரண்டு பேருக்கும் இரண்டாவது திருமணம் நடந்ததா, இல்லையா? என்பது கிளைமாக்ஸ்.
மனைவியிடம் அவசரம் காட்டும்போதும், கோபத்தில் வார்த்தைகளை கொட்டிவிட்டு, பிறகு குழம்பும்போதும் அழுத்தமாக நடித்து இருக்கிறார், விமல். காதலியாக–இளம் மனைவியாக நிஷா அகர்வால். (காஜல் அகர்வாலின் தங்கை) கணவனுடன் பதிலுக்கு பதில் பேசும் இடங்களில் சரியான சண்டைக்கோழி.
படத்தின் பெரிய பலம், சந்தானம். அத்தனை பேரையும் கலாய்க்கிறார். அவர் அடிக்கும் ‘பஞ்ச்’ வசனங்கள், படம் பார்ப்பவர்களை உற்சாகமாக வைத்திருக்கின்றன. சார்லி, யுவராணி, பிரகதி, உமாபத்மநாபன் ஆகியோரும் இருக்கிறார்கள். தமன் இசையில், பாடல்கள் ரொம்ப சுமார்.
காதல்–விவாகரத்து சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார், பிரேம் நிஸார். விமல்–நிஷா அகர்வால் காதல் காட்சிகளில் அழுத்தம் இல்லை. காதலித்து திருமணம் செய்பவர்கள் விவாகரத்து வரை போகக்கூடாது என்ற கருத்தை, விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொன்னதற்காக, டைரக்டரை பாராட்டலாம்.