சென்னை: சிவாஜிகணேசன் சிலையை அகற்றக்கூடாது என்று சினிமா டைரக்டர்கள் கையெழுத்து வேட்டை நடத்தி வருவதாக டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன் கூறினார்.
சினிமா படவிழா:
விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகரன், ஐஸ்வர்யா, காயத்ரி ஆகியோர் நடிக்கும் ‘ரம்மி’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. டிரைலரை, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் வெளியிட, டைரக்டர்கள் லிங்குசாமி, வெற்றிமாறன், ராம் ஆகிய மூவரும் பெற்றுக் கொண்டார்கள்.
விழாவில், டைரக்டர் விக்ரமன் பேசியதாவது:–
‘‘தமிழ் மக்களுக்கு வணங்கும் தெர்ய்வங்களையும், தேசிய தலைவர்களையும், வரலாற்று நாயகர்களையும் நடிப்பின் மூலம் அறிமுகப்படுத்தியவர், சிவாஜிகணேசன். அவர் இல்லாவிட்டால் வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்றவர்கள் எப்படி இருப்பார்கள்? என்று யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட சிவாஜிக்கு சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் அரசு சார்பில் உருவ சிலை வைக்கப்பட்டது.
கையெழுத்து வேட்டை:
அந்த சிலையை அகற்ற வேண்டும் என்று ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அதை தடுத்து நிறுத்த வேண்டியது திரைப்பட துறையை சேர்ந்த அனைவரின் கடமை ஆகும். சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என்று இயக்குனர்கள் சங்கம் சார்பில் கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறோம்.
திரைப்பட துறையை சேர்ந்த மற்ற சங்கங்களும் தங்கள் உறுப்பினர்களிடம் கையெழுத்துகளை பெற்று எங்களிடம் தர வேண்டும். நாங்கள் அதை போக்குவரத்து கமிஷனரிடம் வழங்க இருக்கிறோம்.
இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத இயக்குனர்கள் உடனடியாக சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டும். உறுப்பினர் அல்லாதவர்களின் பட விழாக்களில், இயக்குனர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்.’’
இவ்வாறு டைரக்டர் விக்ரமன் பேசினார்.
பட அதிபர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வரவேற்று பேசினார். டைரக்டர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.