"பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ] Jenny10 "பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ] Neha_a10 "பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ] Kajal-10 "பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ] Ester-10 "பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ] Kajal-11 "பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ] Karthi10 "பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ] Zarine10 "பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ] Shreya10 "பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ] Swathi10 "பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ] Priyam10 "பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ] Hansik10 "பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ] Nayant11
"பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ] Swathi11
April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar


You are not connected. Please login or register

POST 1

avatar
Cinema2013

https://www.facebook.com/cinemacare http://cinemacare.yours.tv https://twitter.com/cinemacare
PROMOTE PAGE

"பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ] Empty "பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ] November 2nd 2013, 2:04 am


"பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ] Billa-10

நடிகர்கள்:
அஜித்குமார், பார்வதி ஓமனகுட்டன்
இசை:
யுவன்சங்கர்ராஜா
இயக்கம்:
சக்ரி டோலட்டி.

டேவிட் பில்லா, இலங்கை தமிழன். அவனுடைய தாய்–தந்தை ராணுவத்தால் கொல்லப்படுகிறார்கள். பில்லாவும், அவனுடைய அக்காவும் மட்டும் உயிர் தப்பி தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். அகதிகள் முகாமில் ஒரு போலீஸ் அதிகாரி சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறான். அவனை, சமயம் பார்த்து பில்லா போட்டுத்தள்ளுகிறான்.கடத்தல் வேலைகளை செய்து வரும் பில்லா, செய்த வேலைக்கு கூலி வாங்குவதற்காக கோவா போகிறான். அங்கே மிகப்பெரிய "டான்" அப்பாசியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிறான். அவன் சொல்லும் வேலைகளை கச்சிதமாக செய்து முடிக்கிறான்.ஒரு கட்டத்தில், டிமிட்ரி என்ற ஆயுத வியாபாரியை சந்திக்கிறான். அவனுடன் ஆயுத கடத்தலில் ஈடுபடலாம் என்று பில்லா, அப்பாசிக்கு ‘ஐடியா’ கொடுக்கிறான். ‘‘நான் சொல்கிற வேலையைத்தான் நீ செய்ய வேண்டும்’’ என்று அப்பாசி, பில்லாவை அவமரியாதை செய்கிறான்.அவனிடம் இருந்து விலகி, பில்லா தனியாக தொழில் செய்ய முயற்சிக்கும்போது, அப்பாசி அடியாட்களை அனுப்பி பில்லாவை கொலை செய்ய சொல்கிறான். அப்பாசியையும், அடியாட்களை கொன்று அவர்களிடம் இருந்து உயிர் தப்புகிற பில்லாவை, டிமிட்ரி போட்டுத்தள்ள முயற்சிக்கிறான். அவனிடம் இருந்து பில்லா எப்படி தப்புகிறான்? என்பதே ‘கிளைமாக்ஸ்.’

டேவிட் பில்லாவாக அஜித்குமார், ஸ்டைலான கடத்தல்காரர் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். பார்வதி ஓமனகுட்டனுடன் நாகரீகமாக காதல் வளர்க்கிறார். சண்டை காட்சிகளில் எதிரிகளின் எலும்புகள் முறிகிற மாதிரி, சூறாவளியாய் சுழன்று அடிக்கிறார்.‘‘போதை மருந்தை வாங்குபவர்களை எப்படி கண்டுபிடிப்பே?’’ என்று கேட்கிற மனோஜ் கே.ஜெயனிடம், ‘‘நல்லவங்களை கண்டுபிடிக்கிறதுதான் கஷ்டம்’’ என்று அஜித் அசால்ட்டாக பதில் சொல்லும்போதும்– ‘‘என் நண்பனாக இருக்க தகுதி வேண்டாம். என் எதிரியாக இருக்க தகுதி வேண்டும்’’ என்று தினேஷ் லம்பாவிடம் கூறும்போதும்– ரசிகர்கள் ஆரவாரம் செய்கிறார்கள்.அஜித்குமாரின் அக்கா மகளாக வருகிறார், பார்வதி ஓமணகுட்டன். நடிப்பதற்கும், டூயட் பாடுவதற்கும் சந்தர்ப்பம் இல்லை. இன்னொரு கதாநாயகி புருனா அப்துல்லா, எல்லா காட்சிகளிலும் நீச்சல் குளம் பக்கத்திலேயே நிற்கிறார். இரண்டு பேரும் சேர்ந்து பேசும் வசனங்களை, விரல் நுனியில் எழுதி விடலாம்.

அப்பாசியாக வரும் சுதன்ஷு பாண்டே, டிமிட்ரியாக வரும் வித்யுத் ஜம்வால் ஆகிய இருவரும் வில்லன்களாக கவனம் ஈர்க்கிறார்கள்.ஏகப்பட்ட அயல் முகங்களுடன் மனோஜ் கே.ஜெயன், ரகுமான், ஸ்ரீமன், இளவரசு, நந்தா சரவணன், தீப்பெட்டி கணேசன் ஆகிய தெரிந்த முகங்களும் இருக்கிறார்கள்.யுவன்சங்கர்ராஜா இசையில் பாடல்களிலும், பின்னணி இசையிலும் ஆங்கில படங்களின் தாக்கம். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில், கண்ணுக்கு அழகான காட்சிகளை கொண்ட வெளிநாடுகளை சுற்றிப்பார்த்த திருப்தி.வசனத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆக்கிரமிப்பை குறைத்து இருக்கலாம். கதாநாயகன், வில்லன் ஆகிய இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்று ஒரு போட்டியே வைக்கலாம். அந்த அளவுக்கு சடலங்களின் எண்ணிக்கை சாஸ்தி.அகதியாக வந்த ஒரு இளைஞன் எப்படி, ‘டான்’ ஆகிறான்? என்ற ஒரு வரி கதையை, இரண்டரை மணி நேரம் ரசிக்கிற மாதிரி ஜனரஞ்சகமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார், டைரக்டர் சக்ரி டோலட்டி.

« VIEW PREVIOUS ARTICLES  |  SEE NEXT ARTICLE »

SHARE WITH YOUR FRIENDS!

URL Direct
BBcode
HTML" />
"பில்லா-II" சினிமா விமர்சனம் [ Billa-2 Review ]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum