நடிகர்கள்: அனிருத் - ஜோஷ்னா
ஒய்.ஜி.மகேந்திரன், தியாகு, பாலாஜி, யோகி தேவராஜ், ஸ்ரீரஞ்சனி, சஞ்சனா
இசை:
ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு:
டி.கண்ணன்
இயக்கம்:
வாசு பாஸ்கர்
தயாரிப்பு:
வாசு பாஸ்கர்-- சீமா மேகலை
கதையின் கரு: காதலர்களுக்கு இடையே விளையாட்டுக்கு கூட ஒளிவு–மறைவு இருக்கக் கூடாது...
சுமன், லண்டனில் வசிக்கும் மிகப்பெரிய கோடீஸ்வரர். மனைவியை இழந்தவர். இவருடைய ஒரே மகள், ஜோஷ்னா. மகளை தமிழ்நாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்து,
ஒரு தமிழ் இளைஞனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது சுமன் மனைவியின் கடைசி ஆசை. இதற்கிடையில் ஜோஷ்னாவுக்கும், சென்னையில் இருக்கும் அனிருத்துக்கும் ஒரு எப்.எம். ரேடியோ மூலம் நட்பு ஏற்பட்டு, இண்டர்நெட் மூலம் காதல் வளர்க்கிறார்கள்.
(முகம் பார்த்துக் கொள்ளாமலே) சுமன், மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மகளை தமிழ்நாட்டுக்கு அனுப்பி மருத்துவ கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்கிறார். காதலனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று ஜோஷ்னா தன் தமிழ்நாட்டு வருகையை மறைத்து விடுகிறார்.
இரண்டு பேரும் ஒரே கல்லூரியில் படித்தும், நேருக்கு நேர் பார்த்தும், அடையாளம் தெரியாமல் விலகி செல்கிறார்கள். அனிருத் உலகமே போற்றும் மிகப்பெரிய டாக்டராக உயர்கிறார். அவரை சுமனுக்கு பிடித்துப்போக, அவருடைய பெற்றோர்களை சந்தித்து சம்பந்தம் பேசுகிறார்.
இரண்டு பேர்களின் விருப்பத்தை மீறி, இருவருக்கும் கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்துக்குப்பின் அவர்கள் வாழ்க்கை என்ன ஆகிறது? என்பதே கதை. அனிருத், ஜோஷ்னா இருவரும் லண்டனில் உள்ள எப்.எம். மூலமாக அறிமுகமாவதும், இருவரும் இண்டர்நெட் மூலம் காதல் வளர்ப்பதும், கவித்துவமான காட்சிகள். ஜோஷ்னா தமிழ்நாட்டுக்கு வந்த பின், கதை வேகம் பிடிக்கிறது. இருவரும் அருகருகே இருந்தாலும், ஒருவரையொருவர் தெரிந்து கொள்ளாமலே திருமணம் வரை செல்வது, அடுத்தது என்ன? என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
சுமனை ஹெலிகாப்டரில் இருந்து இறங்குவது போல் அத்தனை பெரிய கோடீஸ்வரராக காட்டிவிட்டு, அடுத்த சீனிலேயே அவர் மகளுடன் சென்னை வந்து இறங்கி இங்கேயே தங்கிவிடுவது போல் காட்டுவது, நம்பும்படி இல்லை.
அனிருத் குடிகாரராக மாறியபின், திரைக்கதையில் வேகம் குறைகிறது. கதாநாயகனின் நண்பர்கள் என்ற பெயரில் நான்கு பேர்களை கதைக்குள் திணித்திருப்பது, வேஸ்ட். அனிருத், களையான முகமும், திடமான உடற்கட்டும் கொண்ட புதிய வரவு.
கதாநாயகி ஜோஷ்னா, அயல் முகம். நடிப்பிலும், நடை–உடை–பாவனையிலும் "மாடலிங்" வாசனை இருப்பதால், மனதில் ஒட்டவில்லை. வில்லத்தனம் செய்யாத சுமனை பார்த்ததில், ஆறுதல். போலி டாக்டர் வடிவேல் சம்பந்தப்பட்ட காட்சிகள், கலகலப்பூட்டுகின்றன. அவரை தேடி வரும் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் "ஆபரேஷன்" செய்து, அடி உதை வாங்குவது, ஆரவாரமான காமெடி.
ஒய்.ஜி.மகேந்திரன், தியாகு, பாலாஜி, யோகி தேவராஜ், ஸ்ரீரஞ்சனி, சஞ்சனா ஆகியோரும் இருக்கிறார்கள். லண்டன் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும், இரவு நேர சென்னையை படமாக்கியிருப்பதிலும் ஒளிப்பதிவாளர் டி.கண்ணனின் திறமை பளிச். ஸ்ரீகாந்த் தேவா இசையில், ‘‘கண்ணனை தேடி’’ பாடல், சுகமான ராகம்.
டைரக்டர் வாசு பாஸ்கர், ஒரு வித்தியாசமான காதலை ஜனரஞ்சகமாக சொல்ல முயற்சித்து இருக்கிறார். பாடல்களை குறைத்து, திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம். கிளைமாக்ஸ், நெஞ்சை கனக்க வைக்கிறது.